நாவலபிட்டி மகாவலி கங்கைக்கு இன்று மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக்க நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞனின் வீட்டுக்கு காலிபகுதியில் இருந்து வந்த உறவினர்ளோடு இன்று மாலை மகாவலி கங்கையில் ஆழமான பகுதியில் நீராட 2 இளைஞர்களும் ஒரு சிறுமியும் நீராட முற்பட்டபோது குறித்த மூவரும் நீரில் அடித்துக் கொண்டு சென்றதைக் கண்ட பொதுமக்கள் குறித்த காலியை சேர்ந்த சிறுமியையும் இளைஞனையும் உயிருடன் மீட்டெடுத்துள்ன நிலையில் நாவலபிட்டி பலலேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரஞ்சித்குமார் என்ற குறித்த இளைஞனைச் சடலமாக மீட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளுக்காக கம்பளை நீதிமன்ற நீதவான் தலையில் மரண விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது