நாடளாவிய ரீதியிலுள்ள இரத்த வங்கிகளுக்குச் சென்று இரத்த தானம் செய்யுமாறு தேசிய இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் இரத்த தான முகாம்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும், இதனால் இரத்த வங்கியின் வைப்பிலுள்ள குருதியின் அளவு குறைவடைந்துள்ளதாகவும் தேசிய இரத்த வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சுமார் 75 இரத்த முகாம்கள் கடந்த காலங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், தற்போது அவை 55 முகாம்கள் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அருகிலுள்ள இரத்த வங்கிக்கு சென்று இரத்த தானம் செய்யுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 106 இரத்த வங்கிகள் இயங்குவதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.