கல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.
இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு கார்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்களும் எதிர்த்திசையில் பயணித்த வாகனங்களுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கல்கிஸ்ஸை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்தனர்.
விபத்துகளில் உயிரிழந்தோரும் காயமடைந்தவர்களும் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.