தைவான் நாட்டில் அழகான இளம்பெண் ஒருவர் மீன் விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
தைவானின் மிக அழகான மீன் விற்பனையாளர் என இணையவாசிகளால் புகழப்படும் 26 வயது Liu Pengpeng, தனது தாயாருக்கு உதவும் நோக்கிலேயே தாம் மீன் விற்பனை செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீன் சுத்தம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் போன்று லியு செயற்படுவது பலரையும் ஈர்த்துள்ளது. இவரது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வரவேற்பை ஒருபோதும் தாம் எதிர்பார்த்தது இல்லை எனவும் தமது மகிழ்ச்சியை லியு வெளிப்படுத்தியுள்ளார். வியாழனன்று மட்டும் சுமார் 30 பேர் இவரிடம் இருந்து மீன் வாங்கிச் சென்றுள்ளனர். மட்டுமின்றி உள்ளூர் தொலைக்காட்சி குழுவினரும் படம் பிடித்து சென்றுள்ளனர்.
தைவானில் பிரபல நிறுவனங்களுக்கு மொடலாக செயல்பட்டுவரும் லியு, வாரத்தில் மூன்று நாட்கள் தனது தாயாருக்கு உதவ மீன் சந்தைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி தமது 13 வயதில் இருந்தே தாயாருக்கு உதவி வருவதாகவும், அதனாலையே மீன் விற்பனையில் தமக்கு ஆர்வம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு தலைமுறையாக தமது குடும்பம் மீன் விற்பனை செய்து வருவதாக கூறும் லியு, இதுவரை இலாபகரமாகவே தொழில் நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் விளம்பரத்திற்காக மட்டும் தாம் மீன் விற்பனைக்கு செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.