யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்புக் கொடுப்பனவிற்காக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு 12 மில்லியன் ரூபா பணம் முதல் கட்ட கொடுப்பனவு கிடைத்துள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கயாப் புயலின் காரணமாக ஏற்பட்ட சேத்த்திற்கான இழப்பீடுகள் மற்றும் செலவுகளிற்காகவே குறித்த பணம் கிடைக்கப்பெற்றது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையாக மொத்தமாக 978 வீடுகள் சேதமடைந்தன இவ்வாறு சேதமடைந்த அனைத்து வீடுகளிற்கும் உடனடியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.
அதன் பின்னர் அந்த வீடுகளிற்கு ஏற்பட்ட மொத்த சேதம் தனித் தனியே மதிப்பிட்டு அனுப்பி வைக்கப்படும். இவர்களிற்கு ஏற்பட்ட சேதங்களிற்கு ஏற்ப இழப்பீடுகள் கிடைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
இவ்வாறு பாதாப்படைந்த 978 வீடுகளின் முதல் கட்ட கொடுப்பனவிற்காக 10.67 மில்லியன் ரூபா கிடைத்தது. அவை தற்போது விநியோகிக்கப்படுகின்றன.
அதேநேரம் இக் காலப் பகுதியில் ஏற்பட்ட அச்சம் மற்றும் வெள்ளப் பாதிப்புக்களால் இடம்பெயர்ந்தவர்களிற்கான சமைத்த உணவிற்காக 96 ஆயிரத்து 300 ரூபாவும் உலர் உணவு விநியோகத்திற்கு 3 லட்சத்து 300 ரூபாவும்
என மொத்தம் 12 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றது என்றார்.