ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில் ஐக்கியதேசியக் கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் புதன்கிழமை(12)ஐக்கியதேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் குறித்த பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக மாவை சேனாதிராசா கருத்து வெளியிடுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் இன்று(10) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே எவ்வாறு வாக்களிப்பதென முடிவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.