Loading...
தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை இலகுவாகத் தீர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச இந்த விவகாரம் நீதிமன்றங்களிடம் இருப்பதால் பொறுமையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
Loading...
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவினால் மக்களுக்கு எனது பணியை நிறைவேற்ற முடியாதுள்ளது.
உலகில் எங்குமே பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் இப்படிச் செயற்பட்டதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...