ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள நிதி ரீதியான சலுகைகளை வழங்குவது குறித்து பேரம் பேசப்பட்டதாக ஜனாதிபதி அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு தாம் முக்கிய பங்காற்றியதாகவும், அவ்வாறு உதவியவர்களுக்கு எதிராகவே ஜனாதிபதி தற்பொழுது செயற்பட்டு வருவதாக ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.