Loading...
இயக்குநர் வெங்கட்பிரபு சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்குப் பிறகு, ‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சத்யராஜ், ஜெய், ஷாம், சிவா, ஜெயராம், நாசர், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, ரெஜினா உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். இதனை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கிறார்.
Loading...
இந்நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டிருந்த ‘பார்ட்டி’ திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். தவிர, பார்ட்டி 2019-ன் முற்பகுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகர் சிம்புவை வைத்து தனது அடுத்தப்படமாக ‘மாநாடு’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading...