கிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகளற்ற நிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலரும் சிரமப்படுவதாக மக்கள் தெரவித்துள்ளனர்.
கிளிநொச்சி குளத்திலிருந்து வான்பாய்கின்ற நீரானது பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தினுடாக செல்லும் நீரில் சிறுபிள்ளைகள் விழுந்தால் நீரில் இழுத்து செல்லும் நிலை காணப்படுகின்றது.
பன்னங்கண்டி வீதி அமைக்கும் போது இப் பாலத்தையும் அமைத்திருக்கவேண்டும் நீர்ப்பாசன திணைக்களத்தின் அசமந்த போக்கினால் குறித்த பாலம் அமைக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாலத்துக்கு தற்காலிகமாக இரும்பு கம்பிகளேனும் மதகு அமைத்துத் தந்தால் உயிராபத்திலிருந்து பாதுகாக்கமுடியும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.