இலங்கை அரசியலில் பாரிய ஆபத்து ஒன்று காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாளை என்ன நடக்க போகிறது என எங்களுக்கும் தெரியாது. பெரிய ஆபத்து ஒன்று உள்ளதென மாத்திரம் தெரிகிறது. நான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக செயற்பட்டுள்ளேன்.
டிசம்பர் மாதம் வெள்ளம், சுனாமி போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் காலம். எனினும் தற்போது அவ்வாறு ஒன்று நடந்தால் பாரிய ஆபத்து ஏற்படும்.
அமைச்சர் இல்லை, அமைச்சரவை இல்லை. இதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என எனக்கு தெரியவில்லை.
அத்துடன் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை பிரேரணை ஒன்று கொண்டுவர முடியாது. அவ்வாறான ஒன்றையும் செய்ய முடியாது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே தற்போதும் பெரும்பான்மை உள்ளது. அரச ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் மாத்திரம் சம்பள பிரச்சினைகள் ஏற்படாது என்பதை தற்போது கூறலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.