நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் தமிழ் சினிமாவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களின் முக்கியமானவர்.
தமிழ் சினிமாவில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்குனராகவே முதலில் அறிமுகமானார். அவர் தயாரித்த முதல் படமான “பயணங்கள் முடிவதில்லை” 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அவரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம். 1940 நவம்பர் 28ஆம் திகதி பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் உடையார். தாயார் சுந்தாயி அம்மாள்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பல சோகங்களையும், சோதனைகளை கடந்து சாதனையாளராக இருக்கின்றார்.இன்று படவாய்ப்புகள் குறைந்து விட்டதால் நடிப்பதை நிறுத்தியிருந்த நிலையில் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இயக்குனரான ஆர்.சுந்தர்ராஜன் படங்களில் முகம் காட்டிய பின்னரே ரசிகர்களுக்கு பரிட்சயமானார். முன்னரே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாரிய ரசிகர்களை சூரியவம்சம் திரைப்படத்தின் மூலம்தான் தனதாக்கி கொண்டார்.
அதன் பின்னர் மின்சாரக் கண்ணா, பாட்டாளி, உன்னை நினைத்து, நினைத்தேன் வந்தாய், நட்ப்புக்காக, கொண்டாட்டம் என பல திரைப்படங்களில் சுந்தர்ராஜன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றார்.
குசேலனில் ரஜினியை கடுப்பாக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படி நடித்திருந்தாலும் சுந்தர்ராஜன் போல வேறு யாரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்த மாட்டார்கள் என சொல்லுமளவிற்கு நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
ஒரு இயக்குனராக கிட்டத்தட்ட 20 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஆர்.சுந்தர்ராஜனின் திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் காலத்தால் அழியாத பல அற்ப்புதமான பாடல்கள் கொடுத்திருக்கின்றது.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையில் விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘என் ஆசை மச்சான்’ திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் மிகப்பெரும் வெற்றியடைந்தன.
இந்த மூன்று திரைப்படங்களின் பாடல்களைப்பற்றி சொல்வதென்றால் தனிப்பதிவுதான் வேண்டும். அத்தனையும் அற்ப்புதமான பாடல்கள்.
இதுதவிர ஆர்.சுந்தர்ராஜன் செய்ததாக கூறப்படும் மற்றுமொரு சிறப்பான விடயம் தமிழ் சினிமாவின் பெறுமதிமிக்க இரட்டையர்களை இணைத்தமைதான்.
தனித்தனியாக நகைச்சுவையாளர்களாக நடித்துக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்திலை இணைத்து நகைச்சுவை உலகிற்கு ‘கவுண்டமணி, செந்தில்’ என்னும் புதிய நகைச்சுவை இரட்டையர்களை அறிமுகப்படுத்தியதும் ஆர்.சுந்தர்ராஜந்தான்.
‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் இடையிலான கெமிஸ்ரி, டைமிங் , ரியாக்ஷன், டயலாக் டெலிவரி போன்றவற்றை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
இதேவேளை, இயக்குனராக புதுமைகள் என்று பெரிதாக எதையும் செய்யாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு இலாபத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத அற்ப்புதமான பாடல்களையும் கொடுத்துள்ளார்.
கவுண்டமணி செந்திலை இரட்டையர்களாக்கி அடுத்த 15 வருடத்திற்கு நகைச்சுவைக்கு புதிய பாணிய ஏற்ப்படுத்தியுள்ளார். M.S.V, இளையராஜாவை இணைத்ததற்கும் ஆர்.சுந்தரராஜனுக்கு தமிழ் சினிமா என்றும் கடமைப்பட்டிருக்கும்.
பல சாதனைகளை செய்துவிட்டு இன்று சினிமா வாழ்க்கையில் மற்றொரு பக்கத்திற்கு சென்றுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் புதிதாக ஒளிப்பாகும் தொலைக்காட்சி தொடரில் நடித்து கொண்டிருக்கினாறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றார்.