நம் உணவில் முக்கிய கூட்டுப்பொருளாக இருப்பது உப்பு. உப்பு இல்லாமல் எதுவுமே இல்லை. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலேயே’ என சும்மாவா சொன்னார்கள்.
ஆனால் ருசியை மேம்படுத்துவதோடு மட்டும் உப்பு நின்று விடுவதில்லை. அதையும் தாண்டி அது நம் உடலுக்கு வேறு பல வகையில் உதவி புரிகிறது.
பல்வேறு வகையான காயங்கள் மற்றும் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. உப்பு தண்ணீரில் குளிப்பதன் மூலம் பல உடல்நல பயன்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
சருமத்திற்கு மிகவும் நல்லது
சுத்தமான மற்றும் இயற்கையான வடிவத்தில் பயன்படுத்தும் போது, உப்பு தண்ணீர் குளியலில் அதிக கனிமங்களும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
மெக்னீசியம், கால்சியம், புரோமைட், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உங்கள் சரும துளைகளுக்குள் உறிஞ்சப்படும். இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
நச்சுத்தன்மையை நீக்க உதவும்
சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உப்பு குளியல் உதவிடும். வெதுவெதுப்பான நீர் சரும துளைகளை திறக்கும். இதனால் கனிமங்கள் ஆழமாக உள்ளிறங்கி, மிக ஆழமாக சுத்தப்படுத்தும்.
நாள் முழுவதும் உங்கள் சருமம் உறிஞ்சியுள்ள ஆபத்தான நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை உப்பு தண்ணீர் குளியல் நீக்கும். இதனால் உங்கள் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.
பல வகையான பிரச்சனைகளை தீர்க்கும்
சருமத்திற்கு பயனளிப்பதை தாண்டி இன்னும் பல பயன்களை அளிக்கிறது உப்பு தண்ணீர் குளியல். கீல்வாதம் மற்றும் தசைநாண் அழற்சி போன்ற கடுமையான நிலைகளுக்கு சிகிச்சை அளித்திடவும் இது முக்கிய பங்கை வகிக்கிறது.
உறுதியான இணக்கமுள்ள சவ்வு மற்றும் அதற்கு அடியில் இருக்கும் எலும்பு தேய்மானம் அடையும் போது கீல்வாதம் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. தசைநாரில் வீக்கம் ஏற்படும் போது தசைநாண் அழற்சி உண்டாகும். மேலும் அரிப்பு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளையும் உப்பு தண்ணீர் குளியல் போக்கும்.
இறந்த சருமம் நீக்குவதை மேம்படுத்தும்
உங்கள் சருமத்தை உகந்த அளவில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு வழி தான் இறந்த சருமத்தை நீக்குவது. உப்பு தண்ணீரில் குளித்தால் இதனை அடையலாம். பாஸ்பேட் போன்ற சில வகையான உப்பு தண்ணீர் குளியல் டிடர்ஜெண்ட் போன்ற எதிர்வினையை உண்டாக்கும். மரத்துப் போன சருமத்தை மென்மையாக்கவும், இறந்த சருமத்தை நீக்குவதில் உதவிடவும் இது உதவும்.
பாத தசைகளுக்கு பயனை அளிக்கும்
உடலிலேயே அதிக அழுத்தம் ஏற்படும் பாகங்களே பாதம் தான். அது தான் எப்போதுமே நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் உங்கள் உடலேயே தாங்கி பிடிக்கிறது. தசை தளர்ச்சி மற்றும் செருப்பால் கொப்புளங்கள் கூட ஏற்பட்டு, அதனால் நீங்கள் அவதிப்பட்டு வரலாம்.
உப்பு தண்ணீரில் குளித்தால், தசை வலியும் விறைப்பும் குறையும். மேலும் பாதத்தில் ஏற்படும் நாற்றத்தையும் போக்கும்.