பெங்களூரில் பெற்ற தாயைத் துடைப்பத்தால் அடித்த மகன் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால்,அவனது தாயார் புகாரளிக்க மறுத்தமையால் காவல்துறையினர் அந்த இளைஞனை மட்டும் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
பெங்களூரில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் தனது மகன் குறித்துப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசும் போது “தனது மகன் எதிர்காலம் குறித்துப் பயப்படாமல் இருப்பதாகவும்,படிப்பிலும் சுமாராகவிருப்பதாகவும் மிகவும் மனம் வருந்தி பேசியுள்ளார்.
இதனையறிந்த ஆத்திரமடைந்த அவரது 17 வயது மகன் “மீண்டும் இது போன்று தன்னைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது” எனத் தெரிவித்து துடைப்பத்தால் அடித்துள்ளான். அதையும்மீறி சொன்னால் மீண்டும் அடிப்பேன் எனவும் கடுமையாக மிரட்டியுள்ளான்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அக்கா தனது தாயை அடிக்க விடாமல் தடுத்தார். ஆனால், அந்த இளைஞர் அதையும் மீறி தாக்கியதால் அவரது அக்கா போனில் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பெற்ற தாயை துடைப்பத்தால் அடிக்கும் மகன் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து காவல்துறையினர் தாமாக வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்றனர்.ஆனால், அவனது தாயார் புகாரளிக்க மறுத்தமையால் காவல்துறையினர் அந்த இளைஞனை மட்டும் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.