பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக கருதப்பட்ட ஐந்து மாநில தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதே போன்று தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தியிடமிருந்து ராகுல்காந்தி பெற்றார்.
ஒரே ஆண்டில் அவர் வகுத்த வியூகங்கள், இடைவிடாத பிரசாரங்கள், கட்சியினர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்ட விதம் ஆகியவற்றால் தற்போது மூன்று பெரிய மாநிலங்களை பாஜகவிடமிருந்து தட்டிப்பறித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரான ஒரே வருடத்தில் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே இது கருதப்படுகின்றது.
இதேவகையில் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியினர்களிடமும், கூட்டணி கட்சியினர்களிடமும் நட்பு முறையைக் கடைப்பிடித்தால் நிச்சயம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார் என்பது உறுதி என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.