Loading...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது இன்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் முப்படைகள், பொலிஸார் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
Loading...
பருத்தித்துறை பேதுறு முனையை சென்றடைந்ததும் நான்கு மத தலைவர்களின் ஆசிர்வாத பிரார்த்தனைகளுடன் நிறைவு விழா இடம்பெற்றது.
இதில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி உட்பட மாவட்ட முப்படைகளின் தளபதிகளின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...