யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவரின் வீட்டில் துணிகர திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டிலிருந்த பொருட்களும் ஒரு தொகைப் பணமும் திருட்டுக் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,யாழ் மாநகர சபைக்கு முன்னாலுள்ள மாநகர சபை குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் தனியே தங்கி இருந்து இந்தியப் பிரஜை ஒருவர் துணைத் தூதரகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
அவரது வேலையின் நிமித்தம் காலை 8.30 மணிக்குச் சென்று மாலை 6.30 மணிக்கே வீடு திரும்புவார். இதற்கமைய தனது வீட்டைக் பூட்டிவுட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்குச் சென்றுள்ளார்.
இவ்வாறு வேலைக்குச் சென்று மாலை திரும்பி வந்து வீட்டைக் பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த அவரது உடைமைகள் மற்றும் பொருட்கள் என்பன திருட்டுக் போயுள்ளதை பார்த்துள்ளார்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாண பொலிஸார் திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.