போதைப்பொருள் ( கஞ்சா ) பயன்படுத்தியதாக பொலிசார் ஓருவரை சீருடையுடன் பிடித்த பொதுமக்கள் குறித்த பொலிசாரை வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வைரவபுளியங்குளம் நெல்களஞ்சியசாலையில் யாருமற்ற நிலையில் பொலிசார் ஓருவர் சீருடையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில்
நடமாடுவதையடுத்து அவ்விடத்திற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர்குறித்த பொலிசார் போதைப் பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஓருவர் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த பொலிசாரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
சீருடையுடன் கஞ்சா அடித்த பொலிசாரை மடக்கி பிடித்த இளைஞன் அதிர்ச்சி வீடியோ
சீருடையுடன் கஞ்சா அடித்த பொலிசாரை மடக்கி பிடித்த இளைஞன் அதிர்ச்சி வீடியோ http://mutamil.com/archives/52737
Publiée par முத்தமிழ் செய்திகள் sur Mardi 11 décembre 2018
அத்துடன், பொலிசாருக்கு தகவல் வழங்கிய பொதுமகன் தொடர்பிலும் பொலிசார் தகவல்களை திரட்டியிருந்தனர்.