கஜா புயல் போன்றே மீண்டும் பெதாய் புயல் வர உள்ளது என வானிலை ந. செல்வகுமார் ஆசிரியர் பேட்டி கொடுத்து உள்ளார். வானிலை ஆய்வு மையத்தின் அதிகார பூர்வ தகவல் இதுவரை இல்லாத சமயத்தில் இது போன்ற தனியார் நிறுவன வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை நம்பலாமா..? வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் இதற்கு முன்னதாக, பிரதீப் ஜான் கணிப்பு அனைத்தும் அப்படியே நடந்து வந்ததால் வானிலை குறித்து அவர் கூறுவதை மக்கள் நம்ப தொடங்கினர். அதே போன்று சொன்ன நேரத்தில் கணித்த இடத்தில் மழை வரும் . இந்த தருணத்தில் புதியதாக பிரபலமாகி வரும் இன்னொரு நபர் வானிலை ந. செல்வகுமார் ஆசிரியர்.இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் இருந்து பேட்டி கொடுத்து உள்ளார்.அதன்படி,
தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அங்கேயே நீடிக்கிறது.. இது காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாறி, 13 ஆம் தேதி புயலாக மாறி,15 ஆம் தேதி தீவிர அதி தீவிர புயலாக மாறும் தன்மை கொண்டது என்றும், இது கஜா புயல் போன்றே அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து வானிலை ந. செல்வகுமார் ஆசிரியர் பேட்டி அளித்து உள்ளார்.
மேலும், இந்த புயலுக்கு பெயர் பெதாய் என்றும், இது சென்னை, கடலோர், திருவள்ளூர், நாகப்பட்டினம்.. அதாவது கடலோர மாவட்ட பகுதியான இதில் ஏதாவது ஒரு இடத்தில் பலமாக தாக்கும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் 13 ஆம் தேதி வாக்கில் தான் சரியான நிலவரம் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஆனால் இதுவரை அதிகார பூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்தோ அல்லது சென்னை வானிலை ஆய்வு மையமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.