பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண், படுக்கையிலிருக்கும்போது தன்னை யாரோ அணைக்க, ஒரு வேளை தனது கணவனாக இருக்குமோ என எண்ணிப் பார்க்க, அங்கு யாரையும் காணாமல் திகிலில் உறைந்தார்.
NC என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த இளம்பெண், ஒரு நாள் அதிகாலையில் தனது கணவர் படுக்கையில் இருந்து எழுந்ததால் விழித்துக் கொண்டார்.
படுக்கையில் இருக்கும்போதே அவரது கணவர் கதவை மூடும் சத்தம் கேட்க, அவர் அலுவலகம் கிளம்பி விட்டதை உறுதி செய்து கொண்டவராக மீண்டும் தூங்க முயலும்போது, திடீரென கட்டிலில் யாரோ அமர்வதை உணர்ந்திருக்கிறார்.
அப்போது யாரோ அவருக்குப் பின்னால் படுத்துக் கொண்டு, தன் கைகளால் அவரை அணைக்க, அவரது தோள் பட்டை எலும்புகள் சூடாகியிருக்கின்றன.
ஒருவேளை தனது கணவராக இருக்குமோ என்ற எண்ணம் வந்தாலும், அவருக்கு அப்படி சர்ப்ரைஸாக கட்டியணைக்கும் பழக்கமோ, முத்தமிடும் பழக்கமோ இல்லை என்கிறார் அவர்.
பின்புறம் இருந்து யாரோ அணைத்ததால் கூச்சமாகவும் அதே நேரத்தில் குண்டூசிகளால் குத்துவது போல் இருந்தாலும் அதுவும் நன்றாகவே இருந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.
அந்த அணைப்பு இதமாகவும் சுகமாகவும் இருந்ததாக தெரிவிக்கும் அவர், முதலில் அமைதியாக இருந்ததாகவும் ஆனால், பிறகு பயந்து நடுங்கி அழத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
அவரது பயத்துக்கும் அழுகைக்கும் காரணம் அவரது அப்பா. அவரது அப்பா 9 ஆண்டுகளுக்கும் முன் இதே வீட்டில் திடீரென இறந்து போய்விட்டிருக்கிறார்.
அப்போதெல்லாம் அவரது தாயார் அடிக்கடி, தனது கட்டிலில் தன் அருகே யாரோ வந்து அமர்வது போல் உணர்ந்துள்ளதாகவும், அப்படி யாரோ உட்காரும்போது மெத்தை அழுந்துவதையும் கண்டிருப்பதாகவும் கூறுவதுண்டு.
அப்போதெல்லாம் தனது தாயிடம், அவர் துக்கமாக இருப்பதால், அவர் அப்படி உணர்வதாக கூறுவதுண்டு NC.
தற்போது தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உதவி கோரிய NCக்கு, பலரும், தாங்களும் அதேபோன்ற அனுபவங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வேறு சிலரோ NC தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அப்படி உணர்ந்ததாகக் கூற, அவரோ, தனது கணவர் பல் விளக்கும் ஒலியையும், காபி கெட்டிலை அடுப்பில் வைக்கும் ஒலியையும் கேட்டதையும், அவர் வெளியே செல்லும்போது கதவை மூடும் சத்தத்தையும் தான் தெளிவாக கேட்டதால் தான் தூக்க மயக்கத்தில் இருக்கவில்லை என்கிறார்.
இன்னொரு பெண்மணியோ, தானும் இத்தகைய அனுபவத்தைப் பெற்றுள்ளதாகவும், தனது பூனை ஒன்று இறந்து போனதாகவும், பின்னர், தான் அடிக்கடி அந்த பூனையை பார்ப்பதாகவும், வெள்ளிக்கிழமைகளில் கனமான ஒரு சூழல் நிலவும்போது கார் விபத்தில் இறந்துபோன தனது பூனையை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
அது NCயின் அப்பாவாகத்தான் இருக்கும் என்று கூறும் அந்த பெண், உனது பயம் நீங்கும்போது, உன்னை நேசிக்கும் ஒருவர் உன்னை சந்தித்ததற்காக நீ நிச்சயம் மகிழ்ச்சி அடைவாய் என்றும் கூறியுள்ளார்.