வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால் அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
ஏன் வடக்கு கூடாது? பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது.
எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எந்த திசையில் தூங்கலாம்? கிழக்கு திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். குழந்தைகள் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.
ஒருவர் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால் புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேற்கு திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
மேலும் ஒருவர் தூங்கும் போது கால்களை கதவுகள் அல்லது ஜன்னல்களை நோக்கி நீட்டிப் படுக்கக்கூடாது. அதேப் போல் குளியலறை, கழிவறை, சமையலறை, பூஜையறை போன்றவற்றை நோக்கியும் நீட்டிப் படுக்கக்கூடாது. முக்கியமாக வீட்டின் வாசலை நோக்கி கால்களை நீட்டிப் படுக்கக்கூடாது. இந்த நிலையில் இறந்த பிணத்தை தான் வைப்பார்கள்.