தமிழகத்தில் 4 மாத பெண் குழந்தையை அதன் தாய், சுடுகாட்டில் வீசிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தின் நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் சுடுகாட்டு பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று காலையில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் முட்புதர் பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு பிறந்து 4 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழுதபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொலிசார் அங்கு சென்று அந்த பெண் குழந்தையை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குழந்தையை அதன் தாயே சுடுகாட்டில் வீசி சென்று இருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
இருப்பினும் அந்த குழந்தை யாருடையது? எதற்காக சுடுகாட்டில் வீசி சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.