இன்றைய காலக்கட்டத்தில் எந்த ஒரு விஷயங்கள் நடந்தாலும் முதலில் வெளியாகி பரவி வருவது சமூக வலைத்தளங்களே. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பெரிதும் ஆட்டிபடைக்கிறது.
இதனால் நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும், தீயவையும் நிறைந்தாகவே தான் காணப்படுகிறது. இப்படி அனைத்து விஷயங்களுக்காகவும் இண்டர்நெட் உலகையே நம்பி இருக்கும் உலகத்தில் தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தற்போது இணையத்தில் ஒரு காணொளி வெளியாகி அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது. பொதுவாக மிருகங்கள் பெரும்பாலும் தண்ணீரை தான் விரும்பி குடிக்கும். ஆனால் பல்லி ஒன்று மனிதர்கள் விரும்பும் டீயை குடிப்பது தான் சுவாரஸ்யமாக உள்ளது. யாரும் எதிர்பாராத தருணத்தில் டீ வைத்திருப்பதை கண்ட அந்த பல்லி லாவகமாக ஏறி டி-யை குடித்து கொண்டிருக்கிறது. பசியின் தாகத்திற்காக டீ யை உறிஞ்சு குடிக்கும் அந்த காட்சியை உரிமையாளர் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளார்.
மேலும் இதனால் பல்லி விழுந்த உணவை அருந்துவது நம் உயிருக்கே ஆபாத்தாக கூட முடியும் என்பதால், முடிந்த வரை உணவு பொருட்களை பாதுகாப்பாக மூடி வைக்கவும். எந்த ஒரு சாப்பிடும் உணவை திறந்து வைக்க வேண்டாம் என்று இந்த காட்சி உணரவைத்துள்ளது.