இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது நகை திருட்டு பிராண்க். இதுக்கு எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ!.
சமீபத்தில் இளைஞர்கள் இடையே வைரலாக பரவியது Kiki Challenge. இதன் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் Fallen Challenge என்னும் புதிய சவால் தற்போது இணையத்தை கலக்கி வந்தது. அதன் தாக்கமும் குறைந்துள்ள நிலையில், சீனாவில் புதிய பிராண்க் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். அதுதான், “jewellery stealing prank”.
அது என்ன “jewellery stealing prank” என்று பார்கின்றீர்களா?. நமது ஊரில் பிரான்க் வீடியோ என்ற பெயரில் மற்றவர்களை ஏமாற்றுவார்கள் அது போன்றுதான் இதுவும். ஒரு பெண் நகை கடையில் செயின்-னை எடுத்துக்கொண்டு தனது கழுத்தில் போட்டுப்பார்கிறாள். பின்னர் அந்த பெண் அங்கிருந்து வேகமாக எழுந்து இருந்த இடத்தை விட்டு ஓடத்துவன்குகிறார். இவர் ஓடுவதை பார்த்த சக ஊழியர்கள் அவளை பிடிக்க பின்தொடர்ந்து ஓடுகின்றனர். ஆனால், அந்த பெண் வெளியில் செல்லாமல். அங்கிருந்த கண்ணாடி அருகில் நின்று தன் கழுத்தில் உள்ள செயின் நன்றாக இருக்கிறதா என பார்கிறார்.
இதையடுத்து அவரை துரத்தி வந்த சக ஊழியர்கள் அதை கண்டு சிரித்து விட்டு திரும்பவும் வருகின்றனர். இந்த நகைச்சுவையான நகை திருட்டு வீடியோ தற்போது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.
Fam I’m dead ?????????? pic.twitter.com/UPabHJ2cLM
— CJ (@StillerCj) December 7, 2018
திருட்டு விளையாட்டு
இந்த நிகழ்வு சீனாவில் இது ஒரு “குறும்பு” விளம்பரம் ஸ்டண்ட் ஆகவே மாறிவிட்டது. இந்த வீடியோக்கள் திருட்டில் ஆரம்பம் ஆகி நகைச்சுவையில் முடிகிறது. இது போன்று இந்தோனேசியா Instagram influener ஹார்விந்த் ஸ்கின் பிரபலமடைந்த “ஷூ-திருட்டு பிராங்க்” என்ற வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவம்பர் மாத இறுதியில் பதிவிட்டுள்ளார். அந்த அந்த பதிவை சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
அந்த வீடியோவில் அவர் ஒரு ஷூ கடையில் விலை உயர்ந்த ஷூ-வை போட்டு பார்கிறார். பின்னர் கடை ஊழியர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் திடீர் என ஓட ஆரம்பிக்கிறார். இதை கண்ட அந்த ஊழியர். உயிரை வெறுத்தபடி அவரை பிடிக்க பின்னால் ஓடுகிறார். ஆனால் அவர் கடையின் நுழைவு வாயில் வரை சென்று விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறார். இதை கண்ட அந்த ஊழியர் நகைசிவையுடன் சிருக்கிறார். அந்தவீடியோ பதிவுடன் ஹார்விந்த் ஸ்கின், “எண்ணெய் மன்னிக்கவும், நான் உங்களுக்கு ஒரு நிமிடத்தில் மாரடைப்பை வர வைத்துவிட்டேன் ப்ரோ…” என குறிப்பிட்டுள்ளார்.
அண்டை நாடுகளில் சரி நமது நாட்டில் இந்த முறையை பின்பற்றினால் சொல்லவா வேண்டும் இன்னும் சிறிது நாளில் இந்தியாவிலும் இந்த முறை வைரலாகும் என்றும் எதிர்பார்ப்பது தவறில்லை.