நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை(13) பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை நடாத்துகின்றார்.
மத்தியப்பிரதேசம்,தெலுங்கானா, ராஜஸ்தான்,சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த-11 ஆம் திகதி வெளியானது.
இதில்,மத்தியப் பிரதேசம்,சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
மேற்படி தோல்வியைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக எம்பிக்கள் கூட்டம் இன்று(13) டெல்லியில் நடைபெறுகின்றது. இதில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உட்பட பாஜக எம்பிக்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதேவேளை,குறித்த கூட்டத்தில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடாத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.