தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரபல பொது வைத்திய நிபுணர் அ.ரகுபதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(11-12-2018) அதிகாலை திடீர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்.இணுவில் மேற்குப் பகுதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அ.ரகுபதியின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை(13) முற்பகல்- 11 மணி முதல் அவரது இல்லத்தில் இடம்பெறுகிறது.
அதனைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் இன்று பிற்பகல்- 02 மணியளவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படுமென வைத்திய நிபுணரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வைத்திய நிபுணர் அ.ரகுபதியின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகளில் பெருமளவானோர் அணி திரள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(எஸ்.ரவி-)