ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவித்து நேற்று(12) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அடியோடு நிராகரித்துள்ளது.
குறித்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகமற்ற,சட்டவிரோத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எந்தத் தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் வெறுமையானதே. இதனால் தான் நாங்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கின்றோம்.
சபாநாயகர் கரு ஜெயசூரிய ஐக்கியதேசியக் கட்சிக்குச் சார்பாக அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார். ஜனநாயக விரோதமானது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.