சென்னையில் திருமணமான 10 மாதத்தில் 4 மாத கர்ப்பிணி மனைவியுடன் செல்போன நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரதி(32) என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் பிரசாந்தி (21) என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
பிரசாந்தி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாரதியின் தாயார் காலமானார். தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த சாரதி இதனால் மிகுந்த சோகத்தில் இருந்தார். அருகில் உறவினர்கள் இருந்து ஆறுதல் கூற இயலாத நிலையில் மன உளைச்சலில் இருந்தார்.
தாயின் இறப்பை தாங்கிகொள்ள முடியாத சாரதி, தனது இளம் கர்ப்பிணி மனைவியுடன் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொதுமக்கள் தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துக்கொண்ட சாரதி பிரசாந்தி இருவரும் தற்கொலைக்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அதில் தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. தாயார் இறந்த மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.