Loading...
சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் 3 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீ டு இயக்கம் மூலம் சமீப காலமாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஜனனி என்ற பெண், சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Loading...
மனரீதியாக பாதிக்கப்பட்ட ஜனனி, கணவரோடு சேர்ந்து வாழ முடியாமல் விவகாரத்து பெற்றுள்ளார். தன்னை 3 முறை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் மாமா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பெண் 13 ஆண்டுகளுக்கு பின்பு பொலிசில் புகார் அளித்துள்ளார்
Loading...