இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை இராணுவம் விளக்கமளிக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் 2019 மே 17 முதல் 19 வரை காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அறிக்கையின்படி அக்காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்த 500 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகளவில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கையும் காணப்படுகின்ற அதேவேளை, இந்த 500 பேரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து அவர்களது குடும்பத்தார் பதில்களை தெரிந்துக் கொள்ள வேண்டியதுடன், அது குறித்த உண்மைகளை அறிந்துக் கொள்வது அவர்களது உரிமை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.