இலங்கையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவருகின்ற அரசியல் அதிகார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் தமது அபிவிருத்தித் திட்டங்கள் எதனையுமே நிறுத்தாமல் முன்னெடுத்துவருவதாக இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் அரசியல் பிரிவுத்தலைவரும் பேச்சாளருமான லூவோ சொங் தெரிவிக்கின்றார்.
ஆதவனுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதுகருத்து வெளியிட்ட அவர், கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாம் கட்டம் பூர்த்தியடைந்துவிட்டது. அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனைத்தவிர தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை சீனாவில் இருந்து இலங்கை வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை எந்தளவிலும் குறைத்துவிடவில்லை எனக் குறிப்பிட்ட சீனத்தூதரக அரசியல் பிரிவுத்தலைவர் உண்மையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனத் தெரிவித்தார்.
இலங்கைக்கு சீனாவிற்கும் இடையிலான நட்பு அனைத்து சோதனைகளையும் கடந்து காலத்தால் நீடிக்கின்ற உன்னதமான நட்பு என தெரிவித்த அவர் யார் ஆட்சியில் இருந்தாலும் சீனா இலங்கை மக்களுடனான நட்பை தொடர்ந்தும் மதித்து செயற்படும் என்றும் கூறினார்