கும்பகோணம் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் குறித்த பெண்ணுக்கு வேலை கிடைத்தது. அந்த பெண் தனது பணி தொடர்பாக பயிற்சி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு ரயிலில் வந்துள்ளார். கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தான் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார்.
ஆனால், ஆட்டோ டிரைவர் அப்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நள்ளிரவில் இறக்கிவிட்டு சென்றுவிட்டதாகல், அந்த வழியாக வந்த 4 பேர் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செட்டிமண்டபம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த வசந்த்(21), செட்டிமண்டபம் மூப்பனார் நகரை சேர்ந்த புருஷோத்தமன்(19), செட்டிமண்டபம் அலிமா நகரை சேர்ந்த அன்பரசு(19) ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தினேஷ், வசந்த், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணை நடத்தியல், குருமூர்த்தி என்ற அந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டதில் அவர் நடந்தவரை குறித்து வாக்குமூலமாக அளித்துள்ளார்.
ரெயில் நிலையத்தில் இருந்து பெண் ஒருவர் எனது ஆட்டோவை நிறுத்தினார். அவர் ஆங்கிலத்தில் பேசினார். பார்ப்பதற்கு வசதியான பெண் போல தெரிந்ததால், அவரிடம் அதிக அளவு பணத்தை கட்டணமாக வசூலிக்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது.
எனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் கூறிய முகவரிக்கு சம்பந்தமில்லாத செட்டிமண்டபம் பாதையில் சென்றேன். அப்போது அந்த பெண், நான் தவறான பாதையில் செல்வதை செல்போனில் உள்ள மேப் முலம் கண்டுபிடித்து விட்டார். இதனால் என்னை ஆங்கிலத்தில் திட்டினார்.
அவர் பேசிய மொழி எனக்கு சரிவர புரியவில்லை. அவர் போலீசில் மாட்டி விட்டு விடுவாரோ என்ற பயத்தில் செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் நடுவழியில் ஆள்நட மாட்டம் இல்லாத பகுதியில் இறக்கி விட்டு விட்டு வேகமாக எனது சொந்த ஊரான திருப்பணிப்பேட்டைக்கு சென்று விட்டேன்.
அதன்பின் நடந்த சம்பவங்களை பத்திரிகையில் படித்து தெரிந்துகொண்டேன், அந்த நான்கு பேருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என வாக்குமூலம் அளித்துள்ளார்.