ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறக்க ஒரு காரணம் உள்ளது. இந்த வருடத்தில், இந்த மாதத்தில், இந்த நாளில், இந்த நேரத்தில் பிறகே வேண்டும் என அனைத்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. நம்முடைய பிறப்பும், இறப்பும் நாம் பிறக்கும் முன்னாடியே தீர்மானிக்கப்பட்டவை. ஏனெனில் நாம் எப்படி வாழப்போகிறோம் என்பது இவற்றை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
நமது பிறந்த நாளை போலவே நமது பிறந்த வருடத்திற்கும் ஒரு பலன் உள்ளது. பிறந்த நாளை பொறுத்து ஒவ்வொருவரின் குணங்களும், வாழ்க்கைமுறையும் மாறுபட்டாலும் நீங்கள் பிறந்த வருடத்திற்கென ஒரு பொதுவான பண்பு இருக்கும். அதன்படி நீங்கள் பிறந்த வருடமும் உங்களை பற்றிய சில இரகசியங்களை கூறக்கூடும். அதன்படி 1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் அடிப்படை குணம் என்னவாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1980
1980 களில் பிறந்தவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் குணங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமும் அவர்கள் கூட பிறந்தவை. உங்களின் அதீத ஆர்வமும், விளையாட்டுத்தனமும் சிலசமயம் உங்களை மற்றவர்களை வெறுக்கதூண்டும். உங்களின் மூர்கத்தனத்தை மட்டும் கட்டுப்பத்திக்கொள்ளா விட்டால் உங்களின் பல உறவுகளை இழக்க நேரிடும்.
1981
நீங்கள் 1981 ல் பிறந்தவராய் இருந்தால் நீங்கள் புத்திசாலியாகவும், இலட்சிய உணர்வு உள்ளவராகவும் இருப்பீர்கள். எந்தவித கடினமான சூழ்நிலையையும் உறுதியாகவும், தைரியமாகவும் எதிர்கொள்வீர்கள். உங்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் நீங்கள் வாழ்வில் பெரிய உயரங்களை அடைய உதவும். மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ள கடினமாக இருப்பதும், உங்களின் சுயநலமும் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.
1982
1982 ஆன் ஆண்டில் பிறந்தவர்கள் தவறான காரியங்களுக்கு விசுவாசமாக இருக்க வாய்ப்புள்ளது. சுற்றி இருக்கும் அனைவரையும் நேசித்து அரவணைக்கும் உங்களின் குணம் நல்லதுதான் ஆனால் அதனை அவர்கள் உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் நேசிப்பவர்களுக்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய துணியும் உங்கள் குணம் பாராட்டுக்குரியதுதான், ஆனால் அதற்கு அவர்கள் தகுதியானவர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
1983
1983 ல் பிறந்தவர்கள் கருணை மற்றும் இனிமையான குணம் கொண்டவர்கள். உங்களை சுற்றி இருக்கும் அனைவரையும் நம்பும் குணமுடையவர். உங்கள் நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதேசமயம் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பணவிஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது உங்களின் கூடுதல் சிறப்பு குணம்.
1984
1984 ல் பிறந்தவர்கள் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் எனவே மற்றவர்களுடன் பழகுவது இவர்க்ளுக்கு சிரமமான காரியமாக இருக்காது. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் உங்கள் குணம் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உங்களுக்கு பெரிய புகழை பெற்றுத்தரும். ஆனால் நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை, ஏனெனில் உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை எளிதில் காயப்படுத்தக்கூடும்.
1985
1985 ல் பிறந்தவர்கள் தங்கள் இதயத்தின் சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் அறிவுரையை கேட்காமல் தனக்கு எது சரி என்று நீங்களே முடிவெடுப்பீர்கள்.உங்களின் இந்த நடவடிக்கை உங்களுக்கு சிறந்த பலன்களை தரும். உங்களின் உள்ளுணர்வை நம்பும் வரை நீங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி கொண்டே இருப்பீர்கள். ஆனால் உங்களின் கோபம் பெரும்பாலும் மற்றவர்களை காயப்படுத்தக்கூடும்.
1986
நீங்கள் அதிக சுதந்திரத்தை விரும்புபவராக இருப்பீர்கள். உங்களை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் எப்பொழுதும் அதில் தோல்விதான் அடைவார்கள். எந்த முடிவெடுக்கும் முன்னரும், வார்த்தைகளை கூறும் முன்னும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம். அவசரம் எப்போதும் அழிவை உண்டாக்கும் என்று கூறுவார்கள், அது உங்கள் விஷயத்தில் முற்றிலும் உண்மை. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயலுங்கள்.
1987
உங்களிடம் இருக்கும் மிகச்சிறந்த உணர்ச்சி காதல் ஆகும். மற்றவர்களை கவனிக்கும் குணமும், உங்களின் கரிசனமும் மற்றும் உங்கள் காதல் உணர்வையும் உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு குறைவில்லாமல் வழங்குவீர்கள். நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் மற்றவர்களை கவனிப்பது போல உங்களையும் கவனித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
1988
நீங்கள் வேடிக்கையாகவும், வாழ்க்கையை அனுபவித்து வாழவும் விரும்புவீர்கள். உங்களின் குணத்திற்காகவே மற்றவர்கள் உங்களுடன் தங்கள் நேரத்தை செலவிட முயற்சிப்பார்கள். நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் சமநிலையில் வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
1989
உறுதியும், கடின உழைப்பும் உங்கள் இயல்பான குணங்களாகும். உங்களின் வசதியான வாழ்க்கை உங்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். மற்றவர்களிடம் இருந்து உங்களை தனித்துவத்துடன் காட்டுவது என்னவெனில் வாழ்க்கையை நோக்கிய உங்களின் நேர்மறை கண்ணோட்டம்தான். நீங்கள் பெரும்பாலும் மற்றவர்களை நம்பமாட்டீர்கள், மற்றவர்களின் அறிவுரையையும் கேட்கமாட்டீர்கள்.
1990
1990 ல் பிறந்தவர்கள் அவர்களின் உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்தவேண்டும் என்று கற்றுக்கொள்ளவேண்டும். அதனை கட்டுப்படுத்தாமல் இருப்பதுதான் உங்களின் பல இழப்புகளுக்கு காரணமாகும். நீங்கள் அதனை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால் உங்களின் நண்பர்களின் எண்ணிக்கை உடனடியாக இரட்டிப்பாவதை நீங்கள் உணரலாம். மற்றவர்கள் மனதில் நினைப்பதை எளிதில் அறிந்துகொள்ளும் திறமை உங்களுக்கு உள்ளது.
1991
உங்களின் கற்பனைத்திறனும், எச்சரிக்கை உணர்வும் உங்கள் சிறப்பு குணங்கள். மற்றவர்களை நம்ப நீங்கள் அதிக காலம் எடுத்துக்கொள்வீர்கள், கடினமான நேரத்தில் கூட உங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு காட்ட தயங்குவார்கள். உங்களின் நம்பிக்கையற்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களை கவனித்து கொள்வதில் உங்களுக்கு அலாதி இன்பம் இருக்கும்.
1992
நீங்கள் ஒரு சிறந்த படைப்பாற்றல் மிக்க ஆன்மா. உங்களின் கூடவே பிறந்த புத்திசாலித்தனத்தை உங்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவீர்கள். மிகவும் கடினமான சூழ்நிலைகளையும் உங்களின் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் எளிதில் சமாளித்துவிடுவீர்கள். தலைமைப்பண்புடன் பிறந்ததால் நீங்கள் சிலசமயம் மூர்க்கமாக நடந்துகொள்வீர்கள் இதனை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதேபோல அனைத்து நேரத்திலும் வேகம் மட்டுமே கைகொடுக்காது என்று புரிந்துகொள்ளுங்கள்
1993
நீங்கள் வேகமாக முடிவெடுக்கும் குணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களிடம் இருந்து உங்களை பிரித்துக்காட்டும் ஒரு குணம் என்னவெனில் நீங்கள் தீமைக்கும் உண்மையாக இருப்பதுதான். உங்களின் மனநிலை அடிக்கடி மாறுவதை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பல உறவுகளை நீங்கள் சம்பாரிக்கலாம். உங்கள் சுதந்திர உணர்வு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பெரும்பாலும் தெரிந்துகொள்ள உதவாது.
1994
நீங்கள் சத்தியத்தை கடைபிடிப்பவர்கள். உங்களின் நம்பிக்கை மற்றும் மென்மையான குணத்தால் நீங்கள் சிறந்த நண்பராகவும், சிறந்த காதலராகவும் விளங்குவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் எளிதில் மற்றவர்களை கவர உதவும். உங்களின் பதட்டம் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயலுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்களின் தலைமைப்பண்பு அதிகரிக்கும்.
1995
சோதனை மிகுந்த காலக்கட்டத்திலும் வாழ்க்கை மீதான உங்கள் நேர்மறையான எண்ணம் அதனை சமாளிக்க உங்களுக்கு உதவும். கடின உழைப்பாளியான நீங்கள் சூழ்நிலை உங்களுக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் ஒருபோதும் பின்வாங்கமாட்டீர்கள். நீங்கள் யாரை நம்புகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. உங்களை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.
1996
உங்களின் அடிப்படை குணமே உங்களின் ஆர்வம்தான். பொருள்சார் விஷயங்களைப் பற்றிய உங்கள் அன்பு, உங்கள் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவும். உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் வேலை செய்யும்போது நீங்கள் நினைத்த உயரத்தை அடைவீர்கள். உங்களின் ஆர்வம் உங்களை நீங்கள் விரும்பும் மாற்றத்தை உண்டாக்கும்.
1997
1997 ல் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள், தான் நேசிப்பவர்களுக்கு எப்பொழுதும் உண்மையாக இருப்பார்கள். நீங்கள் வாழ்க்கையில் ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன் எப்போதும் உங்களுக்கு பிடித்த விருப்பங்கள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மற்றவர்களின் கருத்தை விட எப்பொழுதும் உங்கள் கருத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பீர்கள். உங்களின் பிடிவாதத்தை சிறிது தளர்த்தி கொள்வது நல்லது.
1998
இந்த ஆண்டில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பீர்கள். உங்களின் புத்திசாலித்தனமும், கற்பனைத்திறனும் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றும். மற்றவர்கள் எளிதில் நம்பக்கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
1999
1999 ல் பிறந்தவர்களின் நகைச்சவை உணர்வு உங்கள் வாழ்க்கையை திருவிழாவாக மாற்ற உதவும். உங்களை மற்றவர்கள் நேசிக்க காரணம் உங்களின் கருணையுணர்வும், நேசிக்கும் குணமும்தான் காரணம். மற்றவர்களை நீங்கள் நேசிப்பது தானாக உங்களை நோக்கி மற்றவர்களை இழுத்துவரும்.
2000
2000 ஆண்டில் பிறந்தவர்கள் அதீத தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பீர்கள். இது அவர்களுக்கு நண்பர்களை சம்பாரிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். உங்களுடைய விடாமுயற்சி உங்களுக்கு அனைத்தையும் எளிதாக்குகிறது. உங்களுக்கு பொய் கூறுவதும், பொய் கூறுபவர்களையும் பிடிக்காது. உங்களின் கடின உழைப்புதான் உங்களின் அடையாளமாக இருக்கும்.