கனடாவின் பல்வேறு நகரங்களிலுள்ள பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ, ஒட்டாவா, கல்கரி, வினிபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று (வியாழக்கிழமை) இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்படுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குடல்லே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்ட அமுலாக்கத்திற்கு முரணான வகையிலான செயற்பாடுகளை அவதானித்தால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களை ஊக்குவித்துள்ளார்.
அத்துடன், இந்த அச்சுறுத்தல்கள் ஆதாரமற்றவையாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரொறன்ரோ ரயில் நிலையத்திற்கு நேற்று விடப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து, அங்கிருந்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையச் செய்யப்பட்டன. எனினும், சில மணிநேரங்களில் ரயில் சேவை வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.