வவுனியா நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலை அதிபர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் பாலியல் சேஷ்டைகள் , துன்புறுத்தல்கள் செய்து வந்துள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
குறித்த பாடசாலை அதிபர் பல நாட்களாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக அறியமுடிகிறதுடன் கா.பொ.சாதாரன தர மாணவிகளிடம் அங்க சேஷ்டை புரிந்து வந்துள்ளதாகவும் பிரத்தியேக வகுப்பு என்று அழைத்து மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் எனவும் அறியமுடிவதுடன் மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதுடன் அதிலும் மாணவிகளுக்கு என விசேடமாக வகுப்புக்கள் நடாத்துவதுடன் தேவாரம் பாட கூறி கண்களை மூடி பாடிகாண்டவேண்டும் என்றும், அந்நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார் எனவும் அறியமுடிகிறது
இவ்விடத்தில் விளம்பரம் செய்ய மாதம் 1500 மட்டுமே… Click Here
பொறுமை இழந்த மாணவிகள் தமது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி எழுத்துமூலமான முறைப்பாட்டை வலயகல்வி பணிப்பாளரிடம் செய்துள்ளனர், இதேவேளை குறித்த பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி குழு சங்கமும் அதிபருக்கு எதிராக வலயகல்வி பணிப்பாளரிடம் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்
மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொள்ள தயங்குகின்றனர் என்பதுடன் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பே அதிபருக்கு எதிரான முறைப்பாட்டை செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது
தேவேளை குறித்த பாடசாலையிலேயே கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியர்களுக்கிடையே குடும்பி சண்டை இடம்பெற்றது என ஊடகங்களில் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது
எனவே இவ்வாறான அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக வெறும் இடம்மாற்றம் தான் தண்டணையாக வழங்கப்படுமா என சமுக நலன் விரும்பிகள் பலரும் கருத்துக்களை பகிர்கின்றனர்
இதேவேளை குறித்த அதிபரின் வளர்ச்சியில் காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை பலிவாங்கும் திட்டமே இது எனவும் அதிபருக்கு சார்பானோர் கருத்துக்களை பகிர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இவர் பற்றிய மேலும் பல ஆதாரங்கள் எமக்கு கிடைக்க இருக்கும் பட்சத்தில் மேலும் பல விபரங்கள் பிரசுரிக்கப்படும் என்பதனையும் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்.