உலகின் முன்னணி தேடுப்பொறியான கூகுள், இந்த ஆண்டிற்கான இயர் இன் சர்ச் (Year in Search) வெளியிட்டுள்ளது.
2018 ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை மக்கள் கூகுளில் அதிகம் தேடிய சம்பவங்கள் மற்றும் தலைப்புக்களை தொகுத்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கூகுள் இயர் இன் சர்ச் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கூகுள் இயர் இன் சர்ச் பட்டியலில் இடம்பெற்ற தலைப்புக்களின் விளையாட்டுக்களில் பிபா உலக கோப்பை, ஐ.பி.எல்., ஆசிய கோப்பை 2018, குளிர்கால ஒலிம்பிக்ஸ் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன.
கூகுளில் குழந்தைகள் அதிகம் தேடியவற்றை பார்க்கும் போது பால் வீர் மற்றும் மோடு பட்லு முன்னிலையிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோபோட் 2.0 திரைப்படம் உள்ளிட்டவை இடம்பிடித்து இருக்கின்றன.
இவற்றை தொடர்ந்து மார்வெல் வெளியிட்ட அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார், பிளாக் பேந்தர் மற்றும் டெட்பூல் 2 உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.
இசையை பொருத்த வரை நேஹா கக்கரின் தில்பார் தில்பார், அரிஜித் சிங்கின் தெரா ஃபிதூர்
உள்ளிட்டவையும் ஆங்கில மொழி தேடலில் லத்தீன் மொழியில் வெளியாகி வைரலான டெஸ்பாசிட்டோ அதிகம் பேர் தேடி இருக்கின்றனர்.
2018இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் ப்ரியா பிரகாஷ் வாரியர், பிரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனஸ், சப்னா சௌத்ரி, பிரியங்க சோப்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ‘How to..’, தேடல்களில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர், ஆதாருடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி உள்ளிட்டவையும் தேடப்பட்டுள்ளது.
‘What is…’, தலைப்பில் சட்டப்பிரிவு 377, சிரியாவில் என்ன நடக்கிறது, கிகி சேலஞ்ச் என்றால் என்ன உள்ளிட்டவற்றை பெரும்பாலானோர் தேடியிருக்கின்றனர்.