அமெரிக்காவில் சியேட்டல் நகரத்திலிருந்து டாலஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் பாதி வழியில் திரும்பியதால் பயணிகள் பெரும் பதற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.
கலிஃபோர்னியாவிலிருந்து Southwest ஏர்லைன்ஸ் மூலம் சியெட்டல் மருத்துவமனைக்கு மனித இதயம் ஒன்று அனுப்பபட்டது.
அதில் எனப்படும் இதயத்திலிருந்து ரத்தம் பாய வகை செய்யும் குழாய்கள் பொருத்தப்படவேண்டியிருந்தது.
பதப்படுத்தப்பட்டுப் பின் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இதயம், திட்டமிட்டப்படி சியெட்டல் விமான நிலையத்திலிருந்து இறக்கப்படவில்லை. அது விமானத்திலேயே இருந்துவிட்டது.
டாலஸ் நகரத்துக்கு விமானம் அதன் பயணத்தைத் தொடர்ந்தது. பாதி வழியில் இதயம் இருந்த பெட்டி இறக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர்.
விமானம் திரும்பிச் செல்லவேண்டியதன் அவசியத்தை விமானி பயணிகளுக்கு விளக்கினார்.
மனித இதயம் 6 மணி நேரம் வரை உடலைவிட்டு வெளியே இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏற்கெனவே விமானத்தில் அது 3 மணி நேரம் இருந்தது.
ஆனால், இதயத்தைச் சரியான நேரத்திற்குள் பெற்றுவிட்டதாக சியெட்டல் நன்கொடை நிலைய மருத்துவர்கள் தெரிவித்ததாய் அந்நகரச் செய்தித்தாள் அறிக்கை வெளியிட்டது.