நேற்றைய தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என கட்சியின் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விசேட அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், நேற்றைய தினம் கட்சியின் சில உறுப்பினர்களால் கூறப்பட்ட கருத்துக்களானவை கட்சிக்குரிய கருத்துக்கள் இல்லை என்றும் அவற்றினை ஏற்றுகொள்ளமுடியாதென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் ரணிலை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபத்துடன் இணக்கம் தெரிவித்ததாக கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை துமிந்த திஸாநாயக்க தலைமையில் முக்கியமான சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.