இப்படி ஒரு வதந்தியை பரப்பி மீண்டும் ஜனாதிபதியாகிறார் மகிந்த ராஜபக்ச என பொய்யான பரப்புரை ஒன்றை மகிந்தாவாதிகள் செய்து வருகிறார்கள்.
தற்போதுள்ள 19வது திருத்தச் சட்டத்தில் 2 முறை ஜனாதிபதியாகிய ஒருவரால் 3 வது முறை ஜனாதிபதியாக முடியாது எனத் தெளிவாக உள்ளது. எனவே அது சாத்தியமே இல்லாதது.
அதனால்தானே மகிந்த அவர்கள் பிரதமராக போட்டியிட முனைகிறார். இல்லாது போனால் அவரால் அடுத்த முறை ஜனாதிபதியாக போட்டியிட முடியுமே?
இது ஒரு படு கேலியான ஒரு பைத்தியகார பரப்புரை. இதைவிட பொய்யான பரப்புரைகளைச் செய்து மனதால் வீழ்ந்து போயுள்ள ஆதரவாளர்களை ஏமாற்ற மகிந்த தரப்பினர் ஈடுபடுவார்கள்.
தவிர புலிகளை எழுச்சி பெற வைப்பார்கள். இன – மத கலகங்களை உருவாக்க முனைவார்கள். ஆனால் இவை எதுவும் இனி சாத்தியப்பட வாய்ப்பில்லை. சிங்கள மக்கள் முன்னை விட தெளிவாகிவிட்டனர்.
மனதால் வீழ்ந்து போயுள்ள மகிந்தாவாதிகளை சற்று ஆறுதல்படுத்தி நிமிர்த்த இப்படியான வதந்திகள் தொடரலாம். ஆனால் அவை உண்மையாகப் போவதில்லை.
மைத்திரி கூட ஜனாதிபதி பதவியை விட்டு கடைசிவரை அடித்து துரத்தினால் ஒழிய போகப் போவதில்லை. அடுத்த முறையும் மைத்திரி ஜனாதிபதியாக பதவிக்கு வரவே முயல்வார் இதுவே உண்மை. ஆனால் அதுவும் கனவுதான்.
இதோ மகிந்தாவாதிகளின் பொய்யான பரப்புரை:
மீண்டும் ஜனாதிபதியாகிறார் மகிந்த ராஜபக்ச
நாட்டின் ஏட்பட்டுள்ள தற்கால அரசியல் நெருக்கடி நிலமைக்கு தீர்வு காணும் முகமாக ஜனாதிபதியின் சுய விருப்பின் பேரில் தனது பதவியை முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவிற்கு கையளிப்பதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன என ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.