இந்தியாவின் உயர்ந்த மதிப்பு கொண்ட 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சில் உறைந்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் நேபாள தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் பஸ்கோடா ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில், இந்திய அரசின் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவற்றை கையிருப்பில் வைத்திருக்கவும் வேண்டாம். அதற்கு மாறாக, இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால், இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாள அரசு திடீரென ஏன் தடை செய்துள்ளது என்பதற்கான காரணத்தை அஅமைச்சர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
நேபாள அரசின் இந்த முடிவால், இந்தியாவில் பணியாற்றும் நேபாள நாட்டினரும், நேபாளத்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.