ரொறன்ரோ டவுன் டவுன் பகுதியில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Lower Simcoe மற்றும் Gardiner பகுதியில், York Streetஇல் அமைந்துள்ள அந்த உயர்மாடிக் கட்டிடத்தின் 16ஆவது மாடியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது குறித்த அந்த நபருக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பிலான தெளிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அவருக்கு உயிராபத்தான காயங்களே ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துக்கான காரணங்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் தொடர்ந்தும் சம்பவ இடத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படவிலலை.