வட அமெரிக்காவிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரியதாக கருதப்படும் வைரக்கல் ஒன்று கனடாவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
552 காரட் பெறுமானத்தைக் கொண்ட மஞ்சள் வைரம் கடந்த ஒக்டோபர் மாதமளவில் இடம்பெற்ற அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அகழ்வில் ஈடுபட்ட தியாவிக் வைர அகழ்வு நிறுவனம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வௌியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கனடாவின் வடமேற்கு எல்லைப்பகுதியில் குறித்த அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த “ஆச்சரியமூட்டும் வைரக்கல்” 33.74 மில்லிமீற்றர் அகலமும், 54.56 மில்லிமீற்றர் நீளமும் கொண்டதாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தியாவிக் நிறுவனத்தின் அகழ்வு தொழிற்கூடத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்பட்ட ரத்தினக்கல் அகழ்வின் போது இந்த வைரம் எதிர்பாராத விதமாக கிடைத்துள்ளது.