ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சூட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள சிர்னோ என்ற கிராமத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிசூட்டு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகளை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் இராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை என்பதுடன், தொடர்ந்தும் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.