அம்பானி மகள் ஈஷா-ஆனந்த் பிரமால் திருமணத்திற்கு மொத்தமாக ரூபாய் 722 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்து செல்ல முகேஷ் அம்பானி 50 தனி விமானங்களையும், 1500க்கும் மேற்பட்ட கார்களையும் வாடைக்கு எடுத்து அசத்தினார்.
அது மட்டும் இன்றி, திருமணத்திற்கான பத்திரிக்கை விலை 1, 50,000 ரூபாய். அது மட்டும் இன்றி, ஆடை, அலங்காரம் என அனைத்திற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். இது எல்லாம் சேர்த்து மொத்தமாக ரூபாய் 722 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதேவேளை, சுமார் 37 வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் திருமணம் ஆடம்பரமாக அதிக செலவில் நடந்ததாகவும், அதன்பிறகு உலக அளவில் அதிக செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் ரூ.722 கோடியில் நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவும் சமூகவாசிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.