16-12-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், மார்கழி மாதம் 1ம் திகதி, ரபியுல் ஆகிர் 8ம் திகதி, 16-12-2018, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை நவமி திதி நாளை அதிகாலை 4:16 வரை; அதன்பின் தசமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 12:35 வரை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம்
* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
பொது : மார்கழி மாத பூஜை ஆரம்பம், சூரியன் வழிபாடு.
மேஷம்:
சிலரது பேச்சு சங்கடத்தை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் செய்ய வேண்டிய பணி தாமதமாகலாம்.பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். பெற்றோரின் அன்பு நிறைந்த வார்த்தை நம்பிக்கையளிக்கும்.
ரிஷபம்:
புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மிதுனம்:
உங்கள் செயலில் வசீகர மாற்றம் உருவாகும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.
கடகம்:
மனதில் இனம் புரியாத குழப்பம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் அக்கறை தேவை. பெண்களுக்கு வீட்டுச் செலவில் அக்கறை தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளால் உதவி உண்டு.
சிம்மம்:
தொடர்பில்லாத பணியால் சிரமம் ஏற்படலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கூடுதல் உழைப்பால் தொழிலில் இலக்கு நிறைவேறும். மிதமான பணவரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
கன்னி:
உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.ஆதாயம் அதிகரிக்கும். நண்பரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
துலாம்:
நண்பர் மூலம் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.
விருச்சிகம்:
திட்டமிட்ட செயல்களில் தாமதம் ஏற்படலாம். உறவினர்களின் ஆலோசனை மனதில் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் பணிகளை நிதானமுடன் நிறைவேற்றுவீர்கள். உணவுப் உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றவும்.
தனுசு:
முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம். தகுந்த திட்டமிடுதல் வெற்றி பெற புதியவழிகளை உருவாக்கும்.சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் சச்சரவு பேசக் கூடாது. செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
மகரம்:
உறவினர் தந்த உதவியால் பெருமை கொள்வீர்கள்.மனதில் உற்சாகம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும்.வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
கும்பம்:
வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது.நிலுவைப் பணியை நிறைவேற்றுவதால் பதற்றம் குறையும்.தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும்.பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.
மீனம்:
பேச்சில் சமயோசிதம் நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும்.உபரி பணவருமானம் கிடைக்கும்.வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.