போலந்தில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்றங்கள் குறித்த மாநாட்டில் சுமார் 200 சர்வதேச நாடுகள் பூகோள காலநிலை ஒப்பந்த விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
கடந்த இரண்டு வாரகாலமாக போலந்தின் கொட்டோவிஸ் நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நேற்று (சனிக்கிழமை) மாலை நிறைவடைந்தன.
இதன்போது, ஒரு பாரிய உலக காலநிலை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அரசியல் பிரிவுகளை வகுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
ஆனால் புவி வெப்பமடைதலின் அபாயகரமான விளைவுகளைத் தடுப்பதற்கு அது போதுமானதாக இல்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மாநாட்டின் இறுதியில், 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கைக்கு மேலதிகமாக, நாடுகள் விரிவான வடிவமைப்பில் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்த உடன்பாடு சராசரி உலக வெப்பநிலையில் அதிகரிக்கும் அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முன் தொழில்துறை மட்டத்திற்கு மேலேயுள்ள இரண்டு டிகிரி செல்சியஸ்க்கும் (3.6 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உள்ளது.