Loading...
ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் உடையில் தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் டான்ஃபோர்ட் மற்றும் பார்மசி வீதிகளின் அருகே, டீஸெட்லே பிளேஸில் உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குறித்த சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ரொறன்ரோ தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்நிலையில் குறித்த சிறுமியை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்த தீயணைப்பு துறையினர், தீப்பிடித்தமைக்கான காரணங்கள் தெரியவில்லை என கூறியுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Loading...