கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வாகனம் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே குறித்த விபத்தின்போது படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வாகனமே குறித்த விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வாகனத்தை ஓடிய பொலிஸ் சாரதி கிளிநொச்சிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.