Loading...
கனடாவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலத்தில் தொங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிரிட்டீஸ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது ஜான்சன் ஸ்டிரீட் பாலம்.
இந்த பாலத்துக்கு சனிக்கிழமை காலை இளைஞர் ஒருவர் குடிபோதையில் வந்தார்.
பின்னர் பாலத்தின் ஓரத்தில் உள்ள கம்பிகளை பிடித்தபடி இளைஞர் தொங்கிய நிலையில் கிழே இருந்த தண்ணீரில் விழுந்துள்ளார்.
Loading...
இதை பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வீரர்களை தண்ணீரில் விழுந்த இளைஞரை மீட்க முயன்றும் முடியவில்லை.
இதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின்னர் இளைஞரின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Loading...