பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மெர்க்கலிடம் மகாராணியார் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுடன் இளவரசர் ஹரியின் மனைவியும் இளவரசியுமான மேகன் மெர்க்கல் மனஸ்தாபத்தில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில்,
அரண்மனையில் இருந்து மெர்க்கலின் முக்கிய உதவியாளர்கள் இருவர் ராஜினாமா செய்து கொண்டதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகிய இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது சந்தேகம் என தகவல்கள் கசிந்தது.
மட்டுமின்றி மிக விரைவில் ஹரியுடன் தனிக்குடித்தனம் செல்ல மெர்க்கல் ஆயத்தமாவதாகவும் கூறப்பட்டது.
இந்த விடயங்களெல்லாம் பிரித்தானிய ஊடகங்களில் பரவலாக விவாதத்துக்கு உள்ளான நிலையில், சமூக ஆர்வலர்கள் பலர், மெர்க்கலை கடிந்து கொண்டதுடன், கேட் மிடில்டன் மற்றும் ராணியார் எலிசபெத்துடன் ஒன்றிணைந்து நின்றால் மட்டுமே எதிர்காலத்தில் அது பலனைத்தரும் எனவும் அறிவுறுத்தினர்.
இந்தநிலையிலேயே மகாராணியார் இரண்டாம் எலிசபெத் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
92 வயதான ராணியார் தமது கடமைகளில் சிலவற்றை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து அதன்படியே செயல்பட்டும் வருகிறார்.
மெர்க்கல் தொடர்பில் பல விவாதங்கள் கொடிக்கட்டிப் பறந்தாலும், அரண்மனை இரண்டாக வேற்பட்டு நின்றாலும், மகாராணியார் எடுத்த இந்த முடிவு பலரது பாராட்டையும் குவித்து வருகிறது.
மகாராணியார் பல்வேறு தொண்டு அமைப்புகளை நேரிடையாக நடத்தி வருகிறார். அதில் முக்கியமான சில பொறுப்புகளை மேகன் மெர்க்கலிடம் ஒப்படைக்க ராணியார் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக விவாதங்கள் அரண்மனை அதிகாரிகளிடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மெர்க்கலும் ராணியாரும் தனிப்பட்டமுறையில் பலமுறை சந்தித்து விவாதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவாதங்களில் இளவரசர் ஹரியும் கலந்து கொண்டுள்ளார். பொறுப்புகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மெர்க்கலின் செயற்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.
அதனையடுத்து அனைத்து அமைப்புகளிலும் மெர்க்கல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதில் முக்கியமாக பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கலை தொடர்பில் மெர்க்கல் முன்னுரிமை அளிப்பார் என கூறப்படுகிறது.
ராணியார் நேரிடையாக இதுவரை 600 தொண்டு அமைப்புகளை செயல்படுத்தி வந்துள்ளார். அதில் 25 அமைப்புகளை கடந்த 2016 ஆம் ஆண்டு இளம் தலைமுறையினரிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.